Theerthavari at 6500 year old Bhaktavatsala Perumal Temple, cheranmahadevi..

Bhaktavatsala Perumal temple is located in the outskirts of Cheranmahadevi amidst paddy fields on the bank of Thamirabarani River. This temple is dedicated to Lord Vishnu. The temple was built by Pandiyas in the 12th century AD. The temple contains late Chola and Pandiya inscriptions. Out of the 108 divya desams, it lies in the 17th place. This place is also called as Sapthamirtha Kshetram.

The temple complex is big and houses two shrines. The smaller shrine is dedicated Bala Krishnan. It is a very attractive sculpture. The bigger temple is dedicated to Bhaktavatsala Perumal.

The Perumal shrine is in standing posture with four hands. He is standing alone without his consorts in this temple. The main shrine has Garbhagriha, ardha mandapa, maha mandapa and the exterior mandapa. Garuda is found to be facing the main shrine.

The temple has great number of pillars with beautiful carvings and relief images.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சேரன்மாதேவி என்னும் ஊரில் உள்ள 6500 ஆண்டு முந்திய பக்தவத்சல பெருமாள் கோயில் என்ற வியாதிபாத பெருமாள் ஆலயம் உள்ளது .

அந்த கோயில் முன் மண்டபத்தில் இன்றும் வியாசர் வசித்து வருவதாக சொல்கின்றனர்.

வியாசர் 12 கோயில் குறிப்பிட்டதில் இதுவும் ஒரு முக்கியமான கோயில். முன் ஜென்ம பாவம் மற்றும் தீராத பிரச்னை எல்லாம் தீர்க்கும் ஸ்தலமாக இது விளங்குகிறது என்று சொல்லப்படுகின்றது.

கடந்த டிசம்பர் மாதம் 25 ,2017 திங்கள்கிழமை அன்று வரும் வியாதீபாத நித்ய யோக நாள் மகா வியாதீபாத நாள் ஆக கொண்டாடபட்டது. அன்று காலை 5 30 மணி அளவில் பெருமாள் தீர்த்த வாரி நடை பெற்றது.

அவருடன் தீர்த்தம் ஆடுபவருக்கு எல்லா தோஷம் கழிந்து மறு பிறவி கிடையாது மேலும் அந்த குடும்பத்தில் சாந்தி அடையாத ஆத்மா ஏதேனும் இருந்தால் சாந்தி அடையும் என்று சொல்லப்படுகின்றது.

காலை 7 மணிக்கு சிறப்பு அலங்காரமும் 7 30 மணி அளவில் கருட சேவையும் நடைபெற்றது .அதை தொடர்ந்து அன்னதானம் நடைபெறுகிறது.

அன்று நடக்கும் அன்னதானத்தில் கலந்து கொள்வது மிக சிறப்பு. அந்த கோயில் கீழ் அதை போன்று ஒரு கோவில் இருப்பதாகவும் அதில் நரசிம்மர் இருப்பதாவும் தகவல் .

பெருமாள் பார்பதற்கு மிகவும் அழகாக வாத்சல்யத்துடன் உள்ளார்.

அடியார்கள் அனைவரும் சென்று அவரது அருளை பெரும் படி கோவில் சார்பாக வேண்டுகிறார்கள்.

அன்றையபொழுதில் முன் நாளில் சிறப்பு பூஜையும் அபிசேகம் மற்றும் அலங்காரம் நடைபெறுகிறது.இந்த ஞாயிறு மற்றும் திங்கள் இரண்டு நாட்கள் மட்டும் கோயில் காலை 5 மணி முதல் மாலை 7 மணி வரை நடை திறந்து இருக்கும்.

மற்ற நாட்களில் காலை 7.30- 10.30 மணி மட்டும். ஒரு வேளை பூஜை மட்டும் தான் .

அன்னதானத்திற்கு நிதி அளிப்பது மிகவும் புண்ணியம் ஆக கருதப்படுகின்றது.

தொடர்புக்கு

Courtesy:திரு விஜயராகவன் பட்டாச்சாரியார்
9842934955

AloJapan.com